Wednesday 23 September 2015



 நண்பன் என்று சொல்வதில் பெருமை

                        எப்போதும் நம் வயதை விட மூத்தவர்களை தான் பாராட்டுவதில் மகிழ்ச்சியும் கௌரவமும் இருக்கும் என நினைபவர்கள் அதிகம், இதை எழுதுவதற்கு முன்னர் நான் கூட அப்படித்தான். ஆனால் என் இளையவனை பற்றி இங்கு  எழுதுவதில் பெருமை அடைகிறேன்.

                        அப்துல் ரஹ்மான் (Martial Tamizha) எனக்கு அறிமுகம் ஆனதே ஒரு எதிர் பாரத தருணம். SRM கல்லூரி வளாகத்தில் என் முதுகில் ஒருவன் தட்டி அழைக்க திரும்பிய உடன் நீங்கள் தனுஷ் ரசிகரா என்று கேட்க நானும் ஆம் என்று சொன்னேன் உடனே என்னை கட்டி தழுவி நானும் அவருடைய ரசிகர் தான் என்று கூறினான். அப்படி அதிர்ஷ்டமாக எனக்கு அறிமுகம் ஆனவனே இந்த அப்துல் ரஹ்மான்.
                       
                        பிறகு தினமும் எங்கள் சந்திப்பு நிகழ்தது, பிறகுதான் அவனின் திறமைகள் தெரிய வந்தது. இவன் சிலம்பாட்டக் கலையில் அசாத்திய திறமை கொண்டவன் என்றும்  ஆல் இந்திய இன்டர்காலேஜ் சாம்பியன் என்றும் தெரிய வந்தது,. பல இடங்களில் தன்னுடைய முத்திரையை ஆழமாக பதித்தவன். 

                       இவன் கடந்து வந்த பாதைகள் எவளவு கடினம் என்பது அவனது உழைப்பில் நம் கண்முன் தெரியும். இந்திய அளவில் சிலம்பாட்டம் துறையில் இவனது புகழ் பறந்தாலும் என்னிடமும் எங்களது நட்பு வட்டத்திலும் எப்போதும் போலவே நடந்து கொள்வான். 

                       எந்த நேரத்திலும் திடீர் என்று கேட்டாலும் தனது சிலம்பாட்டத்தை அரங்கேற்றி அனைவரையும் மகிழ்விப்பான். மேலும் இவனது திறமை  கின்னஸ் சாதனையையும் விட்டு வைக்கவில்லை. ஆம் அப்துல் ரஹ்மான் ஒரு கின்னஸ் சாதனையாளன் கூட.

                       சிலம்பம் மட்டும் அல்ல இவன் ஒரு அற்புதமான புகைப்பட கலைஞன். இவனுடைய புகைப்பட நுணுக்கம் யாரும் எளிதில் அறிய முடியாதவை. திரைப்பட துறையில் பணியாற்றிய அனுபவமும் இவனுக்கு உண்டு. அதன் பயனாக தற்போது கராத்தே கிட் தமிழ் பதிப்பில் நடித்து கொண்டு இருக்கிறான்.

                     உலகில் பல இடங்களில் தன் சிலம்பாட்ட திறமையை நிருபித்த இவன் இன்னும் பல வெளிநாட்டு நிகழ்விற்கு ஒப்பந்தம் ஆகியுள்ளான். அவனுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகளும் பாராட்டுகளும்.

                    இவன் சந்தித்த பிரச்சனைகள் ஏராளம், பல இடங்களில் உயிர் போகும் அளவில் இருந்து மீண்டு தன் திறமையை மீண்டும் மீண்டும் நிலைநாட்டி கொண்டுள்ளான். 

                    உலகளாவிய உயரத்தை சந்தித்த இவன் எங்களிடம் பழகுவது எப்போதும் ஒரே நிலையில் தான். லேட்நைட் டின்னெர், திரைப்படம், சுற்றுல்லா என்று எப்போதும் நெருங்கியே என்னுடனும் என் நட்பு வட்டத்திலும் இருப்பான் , இனியும் கூட.

                  மேலும் இப்பொழுது ஆதரவற்ற குழந்தைகளுக்கு இலவசமாக  சிலம்பம் பயிற்று வருகிறான். இந்த சிறு வயதில் இவன் சந்தித்த சாதனைகள் ஏராளம்  மேலும் இவன் சந்திக்க இருக்கும் சாதனைகள்  இன்னும் ஏராளம் என்று சொல்வதில் மிகுந்த மகிழ்ச்சி. 

                உன்னுடைய திறமை மென்மேலும் வளரவும் உன் திறமை வருகால சாதனயாளர்ர்களுக்கு ஒரு எடுத்துகாட்டாக அமையும் என்பது நிச்சயம். உன்னை என் நண்பன் என சொல்வதில் பெருமை அடைகிறேன் MARTIAL TAMIZHA....





                       









                       

5 comments:

  1. bro...congrats for ur service to children without any fees.........hattsoff bro....

    ReplyDelete
  2. பண்டைத் தமிழ்க் கலைகளில் ஒன்றான சிலம்பக்கலையில் சிறப்புற்று விளங்குவதற்குப் பாராட்டுகள்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி அய்யா

      Delete
  3. Enge katruk kodukirar. Chennaiyil katruk kola aasai. Vazhi katavum

    ReplyDelete